வி.கே. புரத்தில் குத்தகை நிலத்தை கையகப்படுத்த கோரி மறியல்: 65 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் திங்கள்கிழமை குத்தகை நிலத்தை கையகப்படுத்த வலியுறுத்தி இந்து முன்னணியினர், பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 31 பெண்கள் உள்பட 65 பேரை போலீஸார் கைது செய்தனர்.










